அன்புமணி மற்றும் பாமகவினர் விடுதலை 

by Editor / 29-07-2023 12:00:33am
அன்புமணி மற்றும் பாமகவினர் விடுதலை 

கடலூர் மாவட்ட மக்களுக்கும், மண்ணுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்எல்சி,என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்தக் கூடாது,எவ்வளவு விலை கொடுத்தாலும் நிலங்களை விட்டுக்கொடுக்க முடியாதுஎன்பதனை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் என்எல்சியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.இதில் என்எல்சி வாயில் நோக்கி புறப்பட்ட பாமகவினர் போலீசார் இடையே தள்ளுமுள்ளு உருவானது,என்எல்சிக்குள் நுழைய முயன்ற பாமகவினரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் காவல்துறை ஈடுப்பட்டதால் மோதல் உருவாக்கி கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியது.இதன் தொடர்ச்சியாக நெய்வேலியில் போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பாட்டார்.மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து காவல்துறை வாகனம் தாக்கப்பட்டதால் நெய்வேலியில் பதற்றம் உருவானது.பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்கள் இந்த கைதுசம்பவத்திற்கு கண்டனங்களை பதிவு செய்தனர்.இந்த நிலையில்  என்எல்சி முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுதலை  செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்புமணி மற்றும் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via