சவுதி மற்றும் குவைத்தில் பெண்களுக்கு ஹார்ட் எமோஜி குறியீட்டை அனுப்பினால் இரண்டு ஆண்டுகள் சிறை

by Admin / 04-08-2023 11:09:43pm
சவுதி மற்றும் குவைத்தில் பெண்களுக்கு ஹார்ட் எமோஜி குறியீட்டை அனுப்பினால் இரண்டு ஆண்டுகள் சிறை

சவுதி மற்றும் குவைத்தில் பெண்களுக்கு ஹார்ட் எமோஜி குறியீட்டை அனுப்பினால் இரண்டு ஆண்டுகள் சிறை. விதிக்கும்  புதிய சட்டம் அமல் ஆகி உள்ளது. சோசியல் மீடியா தளங்களில் அறிமுகம் இல்லாத மகளிர்க்கு ஹார்ட் எமோஜி எவரேனும் அனுப்பினால் அவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசு இயற்றியுள்ளது.  சவுதி மற்றும் குவை அரேபிய நாட்டு சைபர் கிரைம் சட்டத்தின் படி பெண்கள்- சிறுமிகளுக்கு ஹார்ட் எமோஜி அனுப்புவது குற்றமாகும். இதை மீறி செயல்படுகிறவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிப்பதாக சவுதி மற்றும் மற்றும் குவைத் அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்தை மீறி பெண்களுக்கு எவரேனும் அனுப்பினால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 குவைத்து தினார் கிட்டத்தட்ட 5 லட்சத்து 35,584 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். .சவுதியில் இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரியால் [21,92,588 ] வரை அபராதம் மிதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது சவுதி அரேபியா முழுவதும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via