3மாநில தேர்தல் வெற்றியோடு துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.

by Editor / 04-12-2023 08:50:13am
3மாநில தேர்தல் வெற்றியோடு துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 4) தொடங்குகிறது. இந்த கூட்டங்களில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே காரசார விவாதம் நடக்கும் என தெரிகிறது. மணிப்பூர் சம்பவம், பணவீக்கம் உயர்வு, மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ முறைகேடு என எதிர்க்கட்சிகளும் விவாதத்தை துவக்கும். இந்தக் கூட்டங்கள் இம்மாதம் 22ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது. இதனிடையே ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது. இன்று மிசோரம் மாநிலத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

 

Tags : 3மாநில தேர்தல் வெற்றியோடு துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.

Share via