எல்கேஜி சிறுமியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநர்

by Staff / 06-08-2023 05:03:35pm
எல்கேஜி சிறுமியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநர்

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வருகிறார். நேற்று முன்தினம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பள்ளி வேன் ஓட்டுநர், சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வீட்டில் விட்டு சென்றார். இதனை தொடர்ந்து சிறுமி வயிறு வலிப்பதாக தாயிடம் கூறியுள்ளார். அவர் விசாரித்தபோது பள்ளி வேன் ஓட்டுநர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து புழல் போலீசார் ராஜ் என்பவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via