கோர சாலை விபத்து - சாலையில் கவிழ்ந்த லாரி

by Staff / 07-08-2023 12:03:01pm
கோர சாலை விபத்து - சாலையில் கவிழ்ந்த லாரி

தெலங்கானா மாநிலத்தில் நேற்று சாலையில் திடீரென குறுக்கே வந்த பைக்கால், நிலைதடுமாறிய லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள சிதாகலோனாவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் கவனக்குறைவாக சாலையை கடந்தார். அப்போது, வேகமாக வந்த லாரி நிலைதடுமாறிய சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்பட வில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via