காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் வழக்கு

by Admin / 13-08-2023 12:50:15pm
காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் வழக்கு

 

 இந்த ஆண்டு தமிழத்திற்கு காவிரியில் கர்நாடகம் தர வேண்டிய அளவு தண்ணீர் இன்னும் தராமல் இருப்பதால், அதை உடனடியாக தர வேண்டும் என்று தமிழக அரசு கேட்டு வலியுறுத்தி வருகிறது.திறந்துவிட முடியாத நிலைமை.இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவில் மழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு போதிய அளவில் நீர் வரவில்லை. அதனால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு காவிரி யில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே காவிரியில் கணிசமான நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. அதனால் கூடுதலாக தண்ணீர் திறந்து விட இயலாது. அதனால் 2 மாநிலங்களும் இந்த கஷ்ட காலத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. கேரளா மற்றும் குடகு பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளது. அதனால் நீர்வரத்து குறைந்துள்ளது. நிலைமையை பார்த்து நீர் திறந்துவிடப்படும்.இவ்வாறு சித்தராமையா கூறினார்..

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், இதுதொடர்பாக  தமிழக அரசு நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறது.இதனை அமைச்சர் துரைமுருகன் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து தினத்தந்தி நிருபருக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-வறட்சி காலத்தில்...தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு நியாயமாக நடப்பு ஆண்டு ஜூன் 1-ந்தேதியில் இருந்து இம்மாதம் 11-ந்தேதி வரை 53.27 டி.எம்.சி. நீரை திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழங்கியதோ 15.79 டி.எம்.சி. மட்டும்தான். ஆக நமக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 37.97 டி.எம்.சி. ஆகும்.

 உச்சநீதிமன்றஆணைப்படி, காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த 2 குழுக்களும் சேர்ந்துதான் நமக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து நீரை வாங்கி கொடுக்க வேண்டும்.. ஆனால், இந்த 2 குழுக்களும் ஏனோ, தானோ என்று இருப்பது மட்டும் அல்லாது, வறட்சி காலத்தில் இருக்கிற நீரை எப்படி தமிழ்நாடு, கர்நாடகம் பங்கீட்டு கொள்ள வேண்டும் என்ற ஒரு கொள்கையையும் வகுக்கவில்லை.உச்சநீதிமன்றஆணைப்படி உருவானதுதான் காவிரி நீர் மேலாண்மை ஆணையம். அதனையும் மதிக்கவில்லை, நீரும் தர மாட்டேன் என்று கர்நாடக அரசு சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாகும். எனவே இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டு நாளை வழக்கு தாக்கல் செய்ய போகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து துரைமுருகன் நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவரிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி:- காவிரி நதிநீர் பெறுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவதாக தெரிவித்துள்ளீர்கள். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்பு கிறீர்களா?

சுப்ரீம் கோர்ட்டில் நீதி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?.ஆணையத்தின் செயல் திருப்தி அளிக்கவில்லை

கேள்வி: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பயிர்கள் கருகி வருகிறதே?

பதில்: நடவடிக்கை எடுக்க வேண்டியது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்தான். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. 15 ஆயிரம் கன அடி நீர் தருவதாக சொன்னார்கள். ஆனால் இப்போது அதையும் குறைக்கிறார்கள்.

கேள்வி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?

பதில்: எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

கேள்வி: கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்: கர்நாடகாவில் 82 சதவீதம் நீர் உள்ளது என்று நேற்று (நேற்று முன்தினம்) அறிக்கை கொடுத்துவிட்டேன்.

கேள்வி: காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக அரசுடன் நேரடியாக பேசுவீர்களா?

பதில்: கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன இருக்கிறது?.

இவ்வாறு துரைமுருகன் பதில் அளித்தார்.

 

Tags :

Share via