நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுக - முதல்வர்

by Staff / 20-08-2023 12:43:18pm
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுக - முதல்வர்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில், மதுரை தவிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக அண்ணா நகர் பகுதிச் செயலாளர் ராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது திமுக” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via