நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா

by Editor / 24-07-2021 06:19:27pm
நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா


நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு திருவிழாக்கள் நடைபெறும்போதும் பூஜைகளின் போதும் ஏற்பட்ட சிறு சிறு தவறுகள் ஏற்பட்டால் அதனை சுவாமி அம்பாளிடம் முறையிட்டு நிவர்த்தி செய்யும் விழாவாக ஆண்டுக்கு ஒருமுறை பவித்ர உற்சவம் என்ற விழா நடத்தப்படும் இந்தத் திருவிழா இன்றைய தினம் நெல்லையப்பர் கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்றது.


 காலையில் சுவாமி அம்பாள் மண்டகப்படி மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு பவித்ர மாலை அணிவித்து மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் செப்பு கேடயத்தில் எழுந்தருளச் செய்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.


ஆண்டுதோறும் பவித்ர உற்சவத்தின் போது சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் விநாயகர் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சப்பரத்திலும் எழுந்தருளி செய்து ரதவீதிகளில் வீதி உலா நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரனா நோய் பரவலை தடுக்க அரசு சார்பில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருப்பதன் காரணமாக ரத வீதியில் நடத்தப்படும் உலாவிற்கு பதிலாக கோவில் உட்பிரகாரத்தில் செப்பு கேடயத்தில் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கோவில் யானை காந்திமதி முன்செல்ல பஞ்ச வாத்தியங்கள் முழங்க உட்பிரகார வீதிஉலாவாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொரனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Tags :

Share via