விக்ரம் லேண்டரை படம் பிடித்த பிரக்யான் ரோவர்

by Staff / 30-08-2023 02:08:52pm
விக்ரம் லேண்டரை படம் பிடித்த பிரக்யான் ரோவர்

சந்திரயான் 3 திட்டத்தின் ஒருபகுதியாக கடந்த 23ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி, ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், லேண்டரில் இருந்து நிலவின் மண்ணில் ஆய்வு செய்யப் புறப்பட்ட பிரக்யான் ரோவர் அங்குள்ள நிலை குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அது செய்யும் பணிகளை விக்ரம் லேண்டர் புகைப்படங்களான கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. தற்போது முதன் முறையான விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் படம்பிடித்துள்ளது. இது பற்றிய இஸ்ரோவின் ட்வீட்டில், ஸ்மைல் பிளீஸ், இன்று விக்ரம் லேண்டரின் படத்தை பிரக்யான் ரோவர் கிளிக் செய்ததாக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via