சீமானுக்கு மீண்டும் நன்றி-நடிகர் ராகவா லாரன்ஸ்

by Editor / 31-08-2023 12:20:57am
 சீமானுக்கு மீண்டும் நன்றி-நடிகர் ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியினரும் கடுமையான விமர்சனத்தை வைத்த நிலையில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், சீமான் ரஜினி குறித்து அன்பாக பேசியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி அதே அன்புடன் தானும் சீமானை நேரில் சந்திக்க வருகிறேன் என குறிப்பிட்டு அண்ணன் சீமானுக்கு மீண்டும் நன்றிகள் என பதிவிட்டு உள்ளார்.

 

Tags : சீமானுக்கு மீண்டும் நன்றி-நடிகர் ராகவா லாரன்ஸ்

Share via