மைதா மாவு மூட்டைகளோடு 1.5 டன் புகையிலைப்பொருட்களை ஏற்றிவந்த 2 பேர் கைது.

by Editor / 31-08-2023 10:31:57am
மைதா மாவு மூட்டைகளோடு 1.5 டன் புகையிலைப்பொருட்களை ஏற்றிவந்த 2 பேர் கைது.

தமிழக-கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு தூத்துக்குடி பகுதியில் இருந்து ஒரு வேனில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனி பிரிவினர் செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 5 மணி அளவில் டிஎன் 92 பதிவு எண் கொண்ட ஒரு சரக்கு வாகனம் ஒன்று செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது அந்த வாகனத்தை தனிப்பிரிவு போலீசார் மறித்து  சோதனை செய்ததில் சுமார் 20க்கும் மேற்பட்ட மைதா மூடைகளை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன மைதா மூடைகளுக்கு இடையே சுமார் 60 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா மற்றும் பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாகனத்தை ஓட்டி வந்த இரண்டு நபர்களை பிடித்து செங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து அங்கு வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த புகையிலை பொருட்கள் கடத்தலில் செங்கோட்டையைச் சார்ந்த இரண்டு நபர்கள் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக போலீசார் பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் வேறு ஏதேனும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் புகையிலைப் பொருட்கள் செங்கோட்டை காவல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 

மைதா மாவு மூட்டைகளோடு 1.5 டன் புகையிலைப்பொருட்களை ஏற்றிவந்த 2 பேர் கைது.
 

Tags : மைதா மாவு மூட்டைகளோடு 1.5 டன் புகையிலைப்பொருட்களை ஏற்றிவந்த 2 பேர் கைது.

Share via