மேயருடன் கடும் வாக்குவாதம்

by Staff / 31-08-2023 04:01:32pm
மேயருடன் கடும் வாக்குவாதம்

 கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதனைதொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலரும், மத்திய மண்டல தலைவருமான மீனாலோகு, தங்களது மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாக குற்றம் சாட்டினார். அப்பொழுது திமுக மேயர் கல்பனாவிற்கும் திமுக மண்டல தலைவர் மீனா லோகுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய போவதாகவும் அதிமுக ஆட்சியில் கவுன்சிலராக இருந்த போது கூட மரியாதையாக நடத்தினார்கள் , இப்போது வன்மத்துடன் மேயர் செயல்படுவதாகவும் கூறி மீனா லோகு, வெளிநடப்பு செய்ய போவதாக தெரிவித்து வெளியேற முயன்றார். அப்போது அவரை திமுக கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தி அமர வைத்ததுடன், மண்டல தலைவரின் கோரிக்கைகளை மேயர் கல்பனா செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். திமுக மண்டல தலைவரே திமுக மேயரை எதிர்த்து வெளிநடப்பு செய்ய முயன்றது சக திமுக கவுன்சிலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via