மும்பை ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு

by Staff / 01-09-2023 04:29:21pm
மும்பை ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு

பாட்னா, பெங்களூரு எதிர்க்கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நேற்றும் இன்றும் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், “எதிர்வரும் மக்களவை தேர்தலை 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இணைந்து சந்திப்போம். மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு உடனடியாக தொடங்கப்படும் கட்சிகளிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தொகுதிப் பங்கீடு செய்து முடிக்கப்படும். நாடு முழுவதும் 'இந்தியா' கூட்டணி சார்பாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் சார்ந்த பிரச்னைகள் குறித்து பொதுக்கூட்டங்களில் எடுத்துரைக்கப்படும்” ஆகிய தீர்மானங்களை ‘இந்தியா’ கூட்டணி நிறைவேற்றியது.

 

Tags :

Share via