மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

by Staff / 04-09-2023 11:17:14am
மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். இந்த நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடல்நிலை இப்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via