ஆறுமுகசாமி அறிக்கை: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

by Staff / 06-09-2023 12:13:49pm
ஆறுமுகசாமி அறிக்கை: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக அரசால் .ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. .ஆறுமுகசாமி ஆணையம் , 2022ஆம் ஆண்டு அக்டோபர் 17ல் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது.
ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாா்..அவர்  மனுவில், ஆணையம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்துள்ள  நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள  அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் .ஆறு கோடிக்கு  மேல்.மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு அமைக்கப்பட்ட ஆணையம்  அளித்த  பரிந்துரைகளின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பொதுமக்களும், அதிமுக கட்சியினரும் காத்திருக்கும் நிலையில், அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் வழக்கை விசாரித்த நீதிபதி என். சேஷசாயி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசிற்உத்தரவிட்டு,வழக்கை முடித்துவைத்தார்.

 

Tags :

Share via