மாரடைப்பால் மரணத்தை சந்தித்த மக்கள் மனதில் நீங்க இடம்பெற்ற நடிகர்கள்.

by Editor / 08-09-2023 11:31:54pm
மாரடைப்பால் மரணத்தை சந்தித்த மக்கள் மனதில் நீங்க இடம்பெற்ற நடிகர்கள்.

தமிழ் சினிமாவில் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்ட இந்தியன் திரைப்படத்தின் 2 வது பாகம் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது.இப்படத்தில் நடித்து வந்த விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதன் பிறகு அதே படத்தில் நடித்த மனோபாலா மாரடைப்பால் இறந்தார். தற்போது மாரிமுத்துவும் மாரடைப்பால் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சைவ உணவுகள் அதிகம் சாப்பிட்ட வேண்டும். அதாவது காய்கறி பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மேலும், தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை அறவே செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : மாரடைப்பால் மரணத்தை சந்தித்த மக்கள் மனதில் நீங்க இடம்பெற்ற நடிகர்கள்.

Share via