சாலைகளில் பெருக்கெடுத்த ரெட் ஒயின் நதி

by Staff / 12-09-2023 01:52:38pm
சாலைகளில் பெருக்கெடுத்த ரெட் ஒயின் நதி

போர்ச்சுகலின் சாவோ லூரென்கோ டி பெய்ரோவின் தெருக்களில் சிவப்பு ஒயின் நதியைப் போல பாய்ந்து ஓடியது. அருகிலுள்ள லெவிரா டிஸ்டில்லரியில் ரெட் ஒயின் கொண்டு சென்ற பீப்பாய்கள் வெடித்து, நகரின் தெருக்களில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் லிட்டர் சிவப்பு ஒயின் கொட்டியது. அந்த தெருக்கள் அனைத்தும் இரத்தம் போல் சிவந்து காணப்பட்டது. இறுதியில், அந்த மது அருகிலிருந்த செர்டிமா நதிக்குள் கலந்தது. இருப்பினும், இந்த சம்பவத்திற்கு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதுடன், இழப்பை ஈடுசெய்வதாக தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via