செஸ் வீரர் குகேஷ்க்கு ரூ.30 லட்சம் வழங்கிய முதல்வர்

by Staff / 12-09-2023 04:03:48pm
செஸ் வீரர் குகேஷ்க்கு ரூ.30 லட்சம் வழங்கிய முதல்வர்

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக இடம் பிடித்துள்ளார். கடந்த மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து விஸ்வநாதன் ஆனந்தை (2754 புள்ளி) முந்தினார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து குகேஷ் வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், குகேஷூக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். தமிழக அரசு சார்பில் 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக நிதியுதவி வழங்கப்பட்டது.

 

Tags :

Share via