திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

by Editor / 27-10-2021 05:31:47pm
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை  மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

தமிழகத்தில் புகழ்பெற்ற முருக பெருமான் அறுபடை ஆலயங்களின் திருச்செந்தூர் திருத்தலமும் ஓன்று.இங்கு நடைபெறும் சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.இந்த ஆலயத்தில் வரும் 4 ஆம் சஷ்டி திருவிழா தொடங்கி தேதி துவங்கி நவம்பர் 15 ஆம் தேதி நடைகிறது. விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. 10 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த இரண்டு தினங்களுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக  கடந்தாண்டை போலவே, இந்த ஆண்டும் பக்தர்களின்றி சூரசம்ஹாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி குறித்து அமைச்சர்   ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 4 முதல் நவம்பர் 8 வரை மற்றும் 11 முதல் 15 வரை தினமும் காலை 5 முதல் இரவு 8 வரை பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளது. அதேபோல, திருச்செந்தூர் நகரத்திலுள்ள விடுதிகளில் பேக்கேஜிங் முறையில் தங்குவதற்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via