100 கோடி ரூபாய் சொத்து போலியான ஆவணம் மூலம் விற்பனை ஒப்பந்தம் போட்டதை  ரத்து செய்த பத்திரப்பதிவுத்துறை.

by Editor / 20-07-2023 09:15:06am
100 கோடி ரூபாய் சொத்து போலியான ஆவணம் மூலம் விற்பனை ஒப்பந்தம் போட்டதை  ரத்து செய்த பத்திரப்பதிவுத்துறை.

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும்,நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலியான ஆவணம் மூலம் விற்பனை ஒப்பந்தம் போட்டதாக கூறி அந்த ஒப்பந்தத்தை பதிவுத்துறை ரத்து செய்துள்ளது.மோசடியாகப் பதியப்பட்டதாக கூறி, ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்  ஸ்ரீ நயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், மண்டல துணை பத்திரப்பதிவு துறைத் தலைவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில் பாலாஜி பத்திரப்பதிவு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via