கர்நாடகாவுக்கு எதிராக இந்திய கூட்டணி குரல் கொடுக்காதது ஏன்?தமாகா இளைஞரணித் தலைவர் எம். யுவராஜாகேள்வி

by Staff / 14-09-2023 12:38:15pm
கர்நாடகாவுக்கு எதிராக இந்திய  கூட்டணி குரல் கொடுக்காதது ஏன்?தமாகா இளைஞரணித் தலைவர் எம். யுவராஜாகேள்வி

மத்தியில் ஆளும் பாஜக அரசை தேவையில்லாத காரணங்களுக்கு இந்திய  கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள், கர்நாடகாவின் சர்வாதிகார போக்குக்கு எதிராக இந்திய கூட்டணியில் குரல் கொடுக்காதது ஏன்? என்று தமாகா இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 86-வது கூட்டம் டெல்லியில் நேற்று (செப். 12) நடைபெற்றது. இக்குழுவின் தலைவர் வினித்குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநில நீர்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மைக் கூட்டத்தில், வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதை நிறைவேற்றித் தரக் கோரி நேற்று காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழகம் முறையிட்டது.

 

Tags :

Share via