ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் தாக்குதல்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் உள்ள வீட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இடம், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ மையமாக செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடரும் மோதலில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் நஹால் படைப்பிரிவின் தளபதி ஜொனாதன் ஸ்டெய்ன்பெர்க் உயிரிழந்துள்ளார்.
Tags :