அகில இந்திய பெண் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கனிமொழி கருணாநிதியும் மேடையில் நினைவுப்பரிசு வழங்கினர்.

by Editor / 14-10-2023 10:16:27pm
அகில இந்திய பெண் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கனிமொழி கருணாநிதியும் மேடையில் நினைவுப்பரிசு வழங்கினர்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை ஒட்டி, திமுக மகளிர் அணி சார்பில் 'மகளிர் உரிமை மாநாடு' சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு திமுக தலைவரும்,தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னிலை வகித்தார், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்புரையாற்றினார்.அகில இந்திய பெண் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கனிமொழி கருணாநிதியும் மேடையில் நினைவுப்பரிசு வழங்கினர்.

இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிம்பிள் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும்,அமைச்சருமான லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், டெல்லி சட்டப்பேரவை துணை தலைவர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்திய பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

Tags : அகில இந்திய பெண் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்,நினைவுப்பரிசு வழங்கினர்.

Share via