நீட் தேர்வை ரத்து செய்ய திமுக சார்பில் புதிய இயக்கம்

by Staff / 18-10-2023 12:23:23pm
நீட் தேர்வை ரத்து செய்ய திமுக சார்பில் புதிய இயக்கம்

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடர்பாக திமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணியினர் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 21 ஆம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் இந்த இயக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினால் ஏற்படும் மாணவர்களின் தற்கொலை விகிதத்தை குறைக்கவே இந்த இயக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via