மாம்பழ உற்பத்தியில் ஆந்திர மாநிலம் முதலிடம்

by Staff / 18-10-2023 12:35:47pm
மாம்பழ உற்பத்தியில் ஆந்திர மாநிலம் முதலிடம்

நாட்டிலேயே மாம்பழ உற்பத்தியில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தேசிய சராசரி மாம்பழ உற்பத்தித் திறனை ஆந்திர மாநிலம் தாண்டியுள்ளது. தேசிய சராசரி ஒரு ஹெக்டேருக்கு 9.6 டன்கள் ஆகும். ஆனால் ஆந்திராவின் உற்பத்தி 12 டன்கள். ஆந்திராவை அடுத்து மாம்பழ உற்பத்தியில் ஒடிசா மாநிலம் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் மாம்பழ பதப்படுத்தும் பிரிவுகள் அமைப்பதன் மூலம் விவசாயிகள் மற்றும் வேலையில்லாதோர் பயன்பெறுவார்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via