காசா மருத்துவமனை மீது தாக்குதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

by Staff / 18-10-2023 03:31:24pm
காசா மருத்துவமனை மீது தாக்குதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 12-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, “போர் என்பதே கொடூரமானது, அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள், மனிதம் மரத்துப் போய்விட்டதா?” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via