சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் விவரம் வெளியானது.

by Editor / 24-10-2023 10:46:00pm
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் விவரம் வெளியானது.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து திருச்சி செல்ல ரூ.1,610 முதல் ரூ.2,430 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.1,930 முதல் ரூ.3,070 வரையிலும், கோவைக்கு ரூ.2,050 முதல் ரூ.3,310 வரையிலும், தூத்துக்குடிக்கு ரூ.2,320 முதல் ரூ.3,810 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ.2,380 முதல் ரூ.3,920, வரையிலும், சேலம், தஞ்சை ஆகிய ஊர்களுக்கு ரூ.1,650 முதல் ரூ.2,500 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : ஆம்னி பேருந்து கட்டணம் விவரம் வெளியானது.

Share via