22 நாள் கைக்குழந்தையுடன் காவலர் தேர்வுக்கு வந்த பெண்

by Editor / 28-07-2021 08:40:20pm
22 நாள் கைக்குழந்தையுடன் காவலர் தேர்வுக்கு வந்த பெண்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல்துறை. சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 3437 ஆண்களுக்கும் 2622 பெண்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு அவர்களுக்கு  நேற்று முன் தினம் முதல் நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்விற்கான அழைப்பு கடிதம் ஏற்கனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.   நெல்லை மாவட்டத்தில் தேர்வில் கலந்துகொண்டு உள்ள  ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே 2 இடங்களில் வைத்து தேர்வு நடைபெறுகிறது. பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் பெண்களுக்கும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.கொரனா காலம் என்பதால் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு நாள் ஒன்றிற்கு 500 பேர் வீதம் அழைப்பானை அனுப்பப்பட்டு தேர்வுகள் நடந்து வருகிறது இந்நிலையில் மூன்றாம் நாள் நடைபெறும் உடற்தகுதி தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 22 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் கலந்துகொள்ள வருகை தந்தார். அழைப்பானையை சான்றிதழ் சரிபார்க்கும் பகுதியில் காட்டிய நிலையில் இளம்பெண்ணிடம் மருத்துவர்களின் ஆலோசனை பெற உயரதிகாரிகள் அறிவுறுத்தினர். தகுதி தேர்வு நடைபெறும் இடத்தில் இருந்த மருத்துவர்கள் இளம்பெண்ணின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுரை வழங்கினர். இதனைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் அந்தப் பெண்ணுடன் பேசி உடற்தகுதி தேர்வில் கலந்துகொள்ள அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினார்.இதனால் ஏமாற்றத்துடன் அந்தப்பெண் திரும்பிச் சென்றார்.

 

Tags :

Share via