மஹுவா மொய்த்ராவின் செல்போனை ஹேக் செய்ய முயற்சி

by Staff / 31-10-2023 01:13:32pm
மஹுவா மொய்த்ராவின் செல்போனை ஹேக் செய்ய முயற்சி

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் செல்போனை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அதே போல், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்பி பிரியங்கா சதுர்வேதியின் செல்போனுக்கும், ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண் எம்பி-க்களின் செல்போன்களையும் இந்திய அரசு ஹேக் செய்ய முயன்று, உரையாடல்களை ஒட்டுக்கேட்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு இருவரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி'-ஐ கண்டு மத்திய பாஜக அரசு பயப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via