உலக நாயகனுக்கு கவிப்பேரரசு பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 07-11-2023 12:12:19pm
உலக நாயகனுக்கு கவிப்பேரரசு பிறந்தநாள் வாழ்த்து

கமல்ஹாசனின் 69வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள X பதிவில், நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று கலைஞானி கமல்ஹாசன், இத்துணை நீண்ட திரைவாழ்வு அத்துணை பேர்க்கும் வாய்க்காது, வாழ்வு கலை இரண்டிலும் பழையன கழித்துப் புதியன புகுத்தும் அந்தண மறவரவர், எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்? உடையாத உடல் வேண்டும்; சரியாத மனம் வேண்டும், வாய்த்திருக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via