இந்தியா கூட்டணியில் விரிசலா திருமாவளவன் விமர்சனம்

by Staff / 11-11-2023 01:52:57pm
இந்தியா கூட்டணியில் விரிசலா திருமாவளவன் விமர்சனம்

2024 மக்களவைத் தேர்தலை இலக்கு வைத்து செயல்பாடுகளை வேகப்படுத்த இந்தியா கூட்டணி தவறியுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர். “இந்தியா கூட்டணியை உருவாக்க முயற்சி எடுத்த திமுகவை பிரதமர் மோடியால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும், இந்தியா கூட்டணி பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருக்கிறது. கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாமல் பாதுகாக்க, காங்கிரஸ் நெகிழ்வுத்தன்மையோடு செயல்படவேண்டும். நிதிஷ், அகிலேஷ் கூட காங்கிரஸ் குறித்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த தேக்கத்தை உடைத்தெறிய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via