மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.

by Editor / 15-11-2023 09:39:15am
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி மூன்று நாள், கனமழையால் நேற்று (நவம்பர் 14 ) என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், இன்று (நவம்பர் 15) கனமழை காரணமாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தும் விடுமுறை அளிக்கப்படவில்லை. இந்நிலையில், மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு துலா உற்சவ கடைமுகத் தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை (நவம்பர் 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

Share via