மகளுக்கு பங்களா பரிசளித்த அமிதாப் பச்சன்

by Staff / 25-11-2023 04:15:54pm
மகளுக்கு பங்களா பரிசளித்த அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜூஹுவில் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள பங்களாவை தனது மகளுக்கு பரிசளித்துள்ளார்.அமிதாப் பச்சன் தனது ஆரம்ப காலக் கட்டத்தில் மும்பை ஜூஹுவில் ஒரு பங்களா வாங்கியுள்ளார். அதற்கு அமிதாப் பச்சனின் தந்தை "பிரதிக்‌ஷா " என்று பெயர் வைத்துள்ளார்.மேலும், இந்த பங்களாவை தான் முதன் முதலாக வாங்கியதாகவும், இந்த பங்களாவில்தான் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடைபெற்றதாகவும், டிவி நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் பச்சன் இந்த பங்களா குறித்து பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.இந்தநிலையில், தற்போது இந்த பங்களாவை தனது மகள் ஸ்வேதா நந்தாவுக்கு பரிசளித்துள்ளார். மும்பையின் ஜூஹுவில் இந்த பங்களாவை தவிர்த்து அமிதாப் பச்சனுக்கு சொந்தமான மேலும் சில வீடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via