அயோத்தி-ராமேஸ்வரம்  இடையே  நேரடி விமான போக்குவரத்து  உ.பி அமைச்சர் தகவல் 

by Editor / 29-07-2021 05:31:09pm
அயோத்தி-ராமேஸ்வரம்  இடையே  நேரடி விமான போக்குவரத்து  உ.பி அமைச்சர் தகவல் 



அயோத்தி – ராமேஸ்வரம் இடையே நேரடி விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச போக்குவரத்து துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா தெரிவித்துள்ளார்.


 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய உத்தரப்பிரதேச மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா வருகை தந்தார். அவருக்கு கோவில் சார்பில்  வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அயோத்தியில் தற்போது கட்டப்பட்டு கொண்டிருக்கும் ராமர் கோவிலுக்கும் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவதற்காக அயோத்தி – ராமேஸ்வரம் இடையே விமான போக்குவரத்து தொடங்கப்படும்.


ராமாயணம் காலத்திலிருந்து அயோத்தி – ராமேஸ்வரம் இடையே தொடர்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அயோத்தி – ராமேஸ்வரம் இடையே விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விமான போக்குவரத்து நடைமுறைக்கு வந்தால் பல சுற்றுலாப் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். 
மத்திய அரசு ஏற்கனவே ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கான திட்டம் வைத்துள்ளது என்பதும் விரைவில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் கட்டப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் மீண்டும் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிகிறது. இது நேரத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் அயோத்தி மற்றும் ராமேஸ்வரம் இடையே நிச்சயம் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via