திருக்கார்த்திகை பூக்களின் விலை உயர்வு

by Editor / 26-11-2023 09:27:16am
திருக்கார்த்திகை பூக்களின் விலை உயர்வு

மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் மதுரை மல்லிகை பூ - நேற்று 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2200ரூபாயாக உயர்வு.முல்லைப்பூ நேற்று 800க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 1000 ரூபாய்,கனகாம்பரம்  பூ நேற்று 800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1200 விற்பனை செய்யப்பட்டுவருகிறது.பிச்சி பூ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1000ரூபாய்க்கு விற்பனை.சம்மங்கிப்பூ 150ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 800ரூபாய்க்கும், அரளி 400ருபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும்,  செண்டுமல்லி 200 ரூபாய்க்கும் விற்பனை.

 

Tags : திருக்கார்த்திகை பூக்களின் விலை உயர்வு

Share via