சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறும் இந்திய வீராங்கனை

by Editor / 03-01-2020 10:55:52am
சர்வதேச போட்டிகளில்  இருந்து விடைபெறும் இந்திய வீராங்கனை

ஒடிசாவை சேர்ந்த சுனிதா லக்ரா (28) ஆக்கி வீராங்கனை ஆவார்.

இவர் இதுவரை இந்திய அணிக்காக 139 ஆட்டங்கள் மொத்தம் விளையாடியிருக்கிறார். இவர் 2014 மற்றும் 2018 ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்

இவருக்கு முழங்காலில் அடிபட்ட காரணத்தினால் தனது ஒலிம்பிக் கனவை தகர்க்க நேர்ந்தது மேலும் வருங்காலத்தில் எனது முழங்காலில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதால் காயத்திலிருந்து எப்பொழுது நான் மீண்டும் உடல் தகுதி பெறுவேன் என தெரியவில்லை  காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் இந்திய அணிக்காக விளையாடிய அக்காலம் என்றுமே என் மனதில் நீங்காமல் நினைவிருக்கும். 

எனக்கு பிடித்த ஆக்கி விளையாட்டை விளையாடுவதற்கு ஆதரவாக இருந்த நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி என கூறினார்

 

 

Share via