17 வயது சிறுமி கடத்தப்பட்டு, பேஸ்புக் நண்பரால் கூட்டு பலாத்காரம்

by Staff / 27-11-2023 01:16:03pm
17 வயது சிறுமி கடத்தப்பட்டு, பேஸ்புக் நண்பரால் கூட்டு பலாத்காரம்

மத்தியப்பிரதேசம் குவாலியரில் 17 வயது சிறுமி காரில் கடத்தப்பட்டு பேஸ்புக் நண்பர் மற்றும் இருவரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். முன்னாள் எம்எல்ஏவின் உறவினர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி முக்கிய குற்றவாளியான ராமு குஷ்வாஹாவுடன் பேஸ்புக்கில் பழகியுள்ளார். நவம்பர் 21ஆம் தேதி, வேலை முடிந்து வீடு திரும்பும் போது, ​​காரில் ஏறும்படி ராமு கூறியுள்ளார். சிறுமி மறுத்த நிலையில் காருக்குள் இழுத்து கடத்திச் சென்றுள்ளனர். காரில் மேலும் இருவர் இருந்துள்ளனர். சிறுமியை வெறிச்சோடிய இடத்திற்கு கொண்டு சென்று மூவரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். சுயநினைவு திரும்பியதும், காவல் நிலையத்திற்குச் சென்ற சிறுமி புகாரளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via