மோடிக்கு எதிராக கோவில் சுவர்களில் வாசகங்கள்...

by Staff / 23-12-2023 12:12:17pm
மோடிக்கு எதிராக கோவில் சுவர்களில் வாசகங்கள்...

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்து கோவிலில் பிரதமர் மோடிக்கு எதிராக காலிஸ்தானி ஆதரவாளர்கள் வாசகங்களை எழுதியுள்ளனர். சுவாமி நாராயண் மந்திர் சுவர்களில் கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளது. இந்து அமெரிக்கன் அறக்கட்டளை தனது X கணக்கில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்து அமெரிக்கன் அறக்கட்டளை, மக்களை பயமுறுத்துவதற்காக சுவர்களில் வெறுக்கத்தக்க வகையில் எழுதியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

 

Tags :

Share via