எம்.ஜி.ஆர். நினைவு தினம் இன்று
தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த புரட்சித் தலைவர்- மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு தினம் இன்று. 1917 வது ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிறந்த எம்ஜிஆர் 24 டிசம்பர் 1987 இயற்கை எய்தினார். திரைப்படம் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு அவர் மறையும் காலம் வரை முதலமைச்சராக பதவி வகித்தவர். திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திமுக என்கிற கட்சியை தொடங்கி, அதன் வழியாக முதலமைச்சராக உருவாகியவர். நூற்றுக்கணக்கான படங்களில் தன்னுடைய சிந்தனை -கருத்துக்களை தாம் சார்ந்த திராவிடக் கொள்கை கோட்பாடுகளையும் திரைப்பட வழியாக மக்களுக்கு கொண்டு சென்றவர்.. அவர் மறைந்து இன்றோடு 36 ஆண்டுகள் கடந்து விட்டன..
Tags :