பிரபல காமெடி நடிகர் போண்டாமணி இயற்கை எய்தினார்.

by Admin / 24-12-2023 10:58:34am
பிரபல காமெடி நடிகர் போண்டாமணி இயற்கை எய்தினார்.

பிரபல காமெடி நடிகர் போண்டாமணி இயற்கை எய்தினார் .சிறுநீரகக் கோளாறின் காரணமாக அண்மையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி பிறந்தவர் .60 வயதான நிலையில், கிட்டத்தட்ட 270 படங்களில் நடித்து தன்னுடைய காமெடி பங்களிப்பை தமிழ் திரை உலகிற்கு வழங்கியவர் .நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யாரு அடிச்சாலும் சொல்லாதீங்க என்று சொல்லுகிற அந்த வசனம் இவரை அதிக அளவில் பிரபலமாக்கியது. வின்னர், இங்கிலீஷ்காரன்,  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மருதமலை என வரிசையாக அணிவகுத்து இருக்கும் படங்களில் நகைச்சுவை துணை கதாபாத்திரமாக வலம் வந்த போண்டாமணி இலங்கையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, பல்லாவரம் அருகே வசித்து வந்த அவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்து வந்தார் என்பது அனைவரும் அறிந்தது.

 

Tags :

Share via