அமெரிக்காவில் நடனமாடி பட்டைய கிளப்பிய இந்தியர்கள்

by Staff / 06-01-2024 11:35:45am
அமெரிக்காவில்  நடனமாடி பட்டைய கிளப்பிய இந்தியர்கள்

அமெரிக்காவில் நடத்தப்படும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான America's got talent நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் V Unbeatable என்கிற நடனக்குழு பங்கேற்று நடனமாடி இருந்தனர். அவர்கள், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் இசையில் கடந்த 2008ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற படத்தில் இடம்பெற்ற 'நாக்க முக்க' என்ற பாடலுக்கு நடனமாடி அமெரிக்கர்களை அசரவைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Tags :

Share via