கொரோனா தாக்குதல் மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன

by Editor / 14-03-2020 07:27:00am
கொரோனா தாக்குதல் மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை மணிப்பூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் பீதி காரணமாக, அவரது பயணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
 

 

கொரோனா

இந்தியாவில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்தியாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி அவர் கர்நாடக மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்த முதியவர் ஆவார்.மேலும் ஏராளமான பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனக் கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் டெல்லி, கேரளா, மணிப்பூர் மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன. டெல்லியில் பொது நீச்சல் குளங்கள், ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் ஆகியவை 31-ந்தேதி வரை மூடப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் திருமண விழாவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share via