பிக் பாஸில் 50 லட்சம் ரூபாய் பரிசு தொகையை அர்ஜனா வென்றார்

by Admin / 15-01-2024 02:02:23pm
 பிக் பாஸில் 50 லட்சம் ரூபாய் பரிசு தொகையை அர்ஜனா வென்றார்

ஸ்டார் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் 7 தமிழ் நேற்றோடு நிறைவு பெற்றது. 26 போட்டியாளர்களுடன் 106 நாட்கள் நடந்து முடிந்த பிக் பாஸில் 50 லட்சம் ரூபாய் பரிசு தொகையை அர்ஜனா வென்றார். வைல்ட்கார்டு எண்ட்றியாக வந்த அர்ச்சனா இந்த சீசனில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, வைல்ட்கார்டு என்றைக்கு கடந்த ஆறு சீசனில் வழங்கப்படாத ஒரு சிறப்பு இந்த ஏழாவது சீசனில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு போட்டிகளும் சூழ்ச்சிகளும் நிரம்பிய ஒரு வீடாகவே பிக் பாஸ் வீடு திகழ்ந்தது. தினந்தோறும் அங்கே நடை நடைபெறும் சண்டை- சச்சரவுகளை தமிழ் ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தார்கள் .பல்வேறு தொலைக்காட்சிகளில் பல விறுவிறுப்பான சுவாரசியமான தொடர்கள் ஒளிபரப்பப்பட்டாலும் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் மட்டும் எப்பொழுதும் ரேட்டிங்கில் கலை கட்டும் அந்த அடிப்படையில் இந்த ஆண்டு பிக் பாஸ் செவனில் கடந்த சீசன் போல் செலிபிரிட்டி களின் கூட்டம் இல்லாமல் புதிதாக வளர்ந்து வரக்கூடியவர்களை அதிகமாக கொண்டு நிகழ்த்தப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வெற்றிக்கு அவருடைய தனித் தன்மையும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் காரணமாக அமைந்தது. எந்த சூழ்ச்சியிலும் சிக்காமல்மல் தைரியமாக தன் மனதில் பட்டதை எதார்த்தமாக பேசி விளையாடியது அர்ச்சனாவிற்கு முக்கிய அம்சமாக மாறிவிட்டது. தனித்தன்மைக்கு கிடைத்த ஒரு வெற்றி இது. பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் இருந்து பெண்களுக்கு இவரால் பாதிப்பு ஏற்படலாம் என்று சொல்லி வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து குரல் கொடுத்த ஒரே குரல் அர்ச்சனா உடையது.. அதனால், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருந்த மக்கள் பிரதீப்புக்கு கொடுத்த ஆதரவை வீட்டுக்குள் இருந்த அர்ச்சனா விற்கு வழங்கியது. விஜய் டி.வியையே திக்கு முக்காட வைத்திருக்க வேண்டும் என்று கருது மாதிரியான நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டன .மாயாவிற்கு, கமலஹாசன் ஆதரவு அளிப்பதாக வந்த கருத்து அர்ச்சனா விற்கு ஒரு பலமாக மாறிவிட்டது..

. இருந்தாலும், அர்ச்சனா தன்னுடைய சுய கட்டுப்பாட்டிலும் திறனிலும் விளையாடியதனால் இன்று அபரிவிதமான ஒரு பரிசை அவர் வென்றிருக்கிறார் .அர்ச்சனாவினுடைய தந்தை சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

 பிக் பாஸில் 50 லட்சம் ரூபாய் பரிசு தொகையை அர்ஜனா வென்றார்
 

Tags :

Share via