சென்னை-மதுரை -கொல்லம் இடையே விரைவில்  விஸ்டாடோம் ரயில் அறிமுகம்.?

by Editor / 17-01-2024 11:33:25pm
சென்னை-மதுரை -கொல்லம் இடையே விரைவில்  விஸ்டாடோம் ரயில் அறிமுகம்.?

சென்னை- மதுரை - கொல்லம் வழித்தடத்தில் மேற்கூரை கண்ணாடியாலான ரயில் பெட்டியைக்கொண்ட புதிய ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செங்கோட்டை - புனலூர் வழித்தடத்தில் சென்னை - கொல்லம், மதுரை - குருவாயூர், பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ஆகிய ரயில்கள் வாரம் 2 முறை  இயக்கப்படுகின்றன. இந்தியாவிலுள்ள ரயில் பாதைகளிலேயே, மிகவும் குறைவான வேகத்தில் அதாவது 30 கிலோ மீட்டர் வேகத்தில்  ரயில் இயக்கப்படுவது இந்த மலைவழிப்பாதை வழித்தடத்தில் தான். இயற்கை எழில்கொஞ்சும் இந்தபாதை காண்போரை கவரும்வண்ணம் உள்ளதும்,மலைக்குகைகளை கடந்து செல்வதும் வரலாற்று சிறப்புமிக்க மலைப்பாதையில் உயர்ந்த பாலங்களில் ரயில் இயங்குவதையும் காணமுடியும் ,மேலும் மிருகங்களையும் காணலாம்./இந்தநிலையில், தற்போது, 23 நவீன பெட்டிகளை கொண்ட சோதனை ரயில் ஓட்டம் சென்னையிலிருந்து பல்வேறு கோட்டங்களில் உள்ள ரயில்பெட்டிகளைக்கொண்டு  விஸ்டாடோம் பெட்டியை இணைத்து  கொல்லம் வரை கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags : சென்னை-மதுரை -கொல்லம் இடையே விரைவில்  விஸ்டாடோம் ரயில் அறிமுகம்..?

Share via