அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 6 பேர் பலி

by Staff / 19-01-2024 11:54:07am
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 6 பேர் பலி

டெல்லியின் பிதம்புரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், 4 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தின் முதல் தளத்தில் தீப்பற்றி எரிந்த நிலையில், அதன் மேல் தளங்களில் கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
 

 

Tags :

Share via