தை அமாவாசையை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள். 

by Editor / 09-02-2024 08:22:42am
தை அமாவாசையை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள். 

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ,தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு.

தை அமாவாசையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு.

தை அமாவாசை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நீராடி வருகின்றனர்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் காவேரி சங்க முக தீர்த்தத்தில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பலி கார பூஜைகள் செய்து சங்க முக தீர்த்தத்தில் புனித நீராடி வருகின்றனர்.

தை அமாவாசையோட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடலும் சங்கமிக்கும்  கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நீராடி வருகின்றனர்.
 

தை அமாவாசையை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள். 
 

Tags : தை அமாவாசையை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள். 

Share via