கல்வி ஆர்வத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஓவியம்

by Admin / 03-08-2021 04:11:06pm
கல்வி ஆர்வத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஓவியம்



   
20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணி நேரம் தவிர்த்து அரசு பள்ளி வளாகங்களை பொலிவுபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பட்டாம்பூச்சி என்ற பெயரில் ஆசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று செயல்படுகிறது. இக்குழுவில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணி நேரம் தவிர்த்து அரசு பள்ளி வளாகங்களை பொலிவுபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அதன்படி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகரன், சந்தோஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இக்குழுவினர் பள்ளி வகுப்பறை மற்றும் சுற்றுச்சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அனைவரையும் கவரச்செய்கின்றனர்.
 
குறிப்பாக வரலாற்று சமூகக்கருத்துக்களை கூறும் கதைகளின் பாத்திரங்கள், சிறார்கள் விரும்பக்கூடிய உயிரினங்களின் உருவங்கள், சுதந்திர போராட்டத் தலைவர்கள், கல்வியில் நாட்டம் ஏற்படும் விதமான கருத்துக்களுடன் இந்த ஓவியங்கள் இடம்பெறுகின்றன. தற்போது இரு தினங்களாக, ராகல்பாவி ஊராட்சி துவக்கப்பள்ளியில் கல்விசார் படங்களை ஓவியமாக வரையும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அக்குழுவினருக்கான பாராட்டு விழா அப்பள்ளியில் நடந்தது. ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பிரிட்டோ, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு, வாழ்த்தி, நினைவு பரிசு வழங்கினர். தலைமையாசிரியர் சாவித்திரி, உதவி ஆசிரியர் கண்ணபிரான், பூலாங்கிணறு அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டன

 

Tags :

Share via