கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண திட்டங்களை அறிவித்தார்-முதல்வர் எடப்பாடி

by Editor / 24-03-2020 11:57:47am
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண திட்டங்களை அறிவித்தார்-முதல்வர் எடப்பாடி

அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.

அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கு ஊதியம் சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும்.

பதிவு செய்யப்படாத நடைபாதை வியாபாரிகளுக்கு,

பொதுவிநியோகத் திட்டத்தில் ரூ.1000 ரூபாயுடன் கூடுதலாக ரூ.1000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

எந்த வசதியும் இல்லாதோர் ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு 

அவர்கள் இருக்கும் இடத்திலேயே சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும்.

தேவைக்கேற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க, சென்னை மாநகர ஆணையருக்கும் பிற மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு.

தற்போது தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும்

"பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை" அடையாளம் கண்டு, 

அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.

 

அம்மா உணவகத்தின் மூலம் சூடான சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும்.

கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நலவாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக,

தலா ரூ.1000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ரூ.3280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Share via