நேற்று கட்சியில் இணைந்தவருக்கு இன்று ராஜ்யசபா சீட்

by Staff / 14-02-2024 04:41:10pm
நேற்று கட்சியில் இணைந்தவருக்கு இன்று ராஜ்யசபா சீட்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் நேற்று இணைந்தார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கான பாஜகவின் சமீபத்திய வேட்பாளர்கள் பட்டியலில் அசோக் சவானுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவையும், அசோக் சவானின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து அவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்தியப்பிரதேச மாநிலத்துக்குறிய சீட்டில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்

 

Tags :

Share via