நாடாளுமன்ற பொதுத்தோ்தல்- திமுக வேட்பாளராக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு.

by Admin / 16-02-2024 08:37:55am
 நாடாளுமன்ற பொதுத்தோ்தல்- திமுக வேட்பாளராக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு.

: நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தோ்தல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 19.02. 2024 முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும் என்றும் போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து 01.03. 2024 முதல்0 7..0.3 2024 மாலை ஆறு மணிக்குள் தலைமை கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பில் கேட்டுக்கொள்கிறார். வேட்பாளர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூபாய் 2.000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 நாடாளுமன்ற பொதுத்தோ்தல்- திமுக வேட்பாளராக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு.
 

Tags :

Share via